search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதஞ்சலி உணவுப்பூங்கா"

    ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படும் என கூறப்பட்ட இந்த பூங்காவுக்கு முதல்வர் வசுந்த்ரா ராஜே அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில், ஆலை அமைய உள்ள இடம் ஒரு ஆலையத்தின் டிரஸ்டுக்கு சொந்தமானது என்றும், இந்த நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விட முடியும் என பின்னர் தெரிய வந்தது. இதனால், உணவுப்பூங்கா அமைப்பதில் முட்டுக்கட்டை விழுந்தது.

    மாநில அரசும் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது. தற்போது, மாற்று இடம் தேடப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் புதிய உணவுப்பூங்கா அமைக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 
    உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு சரியான ஒத்துழைப்பு இல்லாததால் வெளியேறப் போவதாக பதாஞ்சலி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், உ.பி அரசு அசுர வேகத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. #Patanjali
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் யமுனை விரைவுச்சலை பகுதியில்  6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க பதஞ்சலி நிறுவனம்  திட்டமிட்டிருந்தது. இதற்கு யமுனை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனையடுத்து, உ.பி.யில் உணவுப்பூங்கா அமைப்பதை கைவிடுவதாகவும், இந்த தொழிற்சாலையை மற்றொரு மாநிலத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக பதாஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால கிருஷ்ணா நேற்று தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். “பதாஞ்சலி நிறுவனம் மாநிலத்தை விட்டு வெளியே போக விடமாட்டோம். இதற்கு தேவையான எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என அம்மாநில தொழில்துறை மந்திரி சதிஷ் மஹானா தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச அரசின் இந்த விரைவான முடிவால், தனது முந்தைய முடிவை பதாஞ்சலி நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க நீண்ட காலம் எடுத்து கொள்ளும் அரசுகள் இருக்கும் நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஒரே நாளில் உ.பி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×